தமிழ்நாட்டின் சிறப்பு
தமிழ் நாட்டின் சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோவில்கள் இருப்பதேயாகும். "கோவில்" என்று பெயர் வைத்து விமானமும் குறையும் வைத்து கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பது கூட இல்லாமல் , அரச மரத்தடிகலிலே கூட வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார். தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோவில், நதிக்கரைகளிலேல்லாம் பிள்ளையார், மரத்தடிகளிலேல்லாம் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ்த் தேசம் முழுவதும் அவர் வேறெந்த சுவாமிக்கும் இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள் பாலித்து வருகிறார். அவரைப் "பிள்ளையார் என்றே அன்போடு கூறுவதுநம் தமிழ் நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வ லோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேஸ்வரர்களின் மூத்தபிள்ளை அவர். "பிள்ளை" என்றால் முதலில் அவரைத்தான் சொல்ல வேண்டும். வெறுமே பிள்ளை என்று சொன்னால் மரியாதை குறைவு என்பதால் பிள்ளையார் என்பது அழைக்கிறோம்.குமாரன் என்றாலும் பிள்ளை என்றே அர்த்தம். பாரத தேசம் முழுவதும் குமாரன் குமாரஸ்வாமி என்றால் பார்வதி பரமேஸ்வரர்களின் இளைய பிள்ளையாகிய சுப்பிரமணிய சுவாமியையே குறிக்கும். தமிழும் kஉமரைக் கடவுள் என்கிறோம். ஆனால் அவரைக் குமரனார் என்பதில்லை.குமரன் என்றுதான் சொல்வார்கள். முத்த பிள்ளைக்கே மரியாதை கொடுத்துப் பிள்ளையார் என்று அழைக்கிறோம்.முதல் பிள்ளை இவர். குழந்தை சுவாமி. ஆனாலும் இவரே எல்லாவற்றுக்கும் ந ஆதியில் இருந்தவர். பிரணவம்தான் அனைத்துக்கும் முதல். பிரணவத்திலிருந்துதான் சகல பிரபஞ்சமும் ஜீவ ராசிகளும் தோன்றின. அந்தப் பிரணவத்தின் ஸ்வரூபமே பிள்ளையார். அவரது யானை முகம் வளைந்த துதிக்கை என அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால் பிரணவத்தின் வடிவமாகவே தெரியும்.குழந்தையாக இருந்து கொண்டே ஆதி முதலின் தோற்றமாக விளங்குகின்ற பிள்ளையார் குழந்தை போல் தோன்றினாலும் பக்தர்களை கை தூக்கி விடுவதில் அவருக்கு நிகர் அவரே. ஔவையார் ஒருவரின் உதாரணமே போதும். ஔவை மிகப்பெரிய கணபதி உபாஸகி. பிரணவ ஸ்வரூபியாந விநாயகரைப் புருவ மத்தியில் த்யாநித்து, யோக சாஸ்திரம் முழுவதையும் உள்ளதக்கியதான "ஸ்ரீ விநாயகர் அகவலைப்" பாடியுள்ளார். அதைப் பாராயணம் செய்தால் பரம ஞானம் உண்டாகும். இந்த ஔவையாரைப் பற்றி ஒரு கதை உண்டு. சுந்தர மூர்த்தி சுவாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாயத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஔவையாரையும் உதந் அழைத்துப் போக எண்ணினார்கள். அப்போது ஔவை விக்நேஸ்வரருக்குப் பூஜை செய்து கொண்டிருந்தார் விரைந்து பூஜையை முடித்துவிட்டுத் தங்களுடன் கைலைக்குப் புறப்படுமாறு சுந்தர மூர்த்தி சுவாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் அவசரப் படுத்தினார்கள் ஔவையோ "நீங்கள் செல்லுங்கிறபடி செல்லுங்கள் உங்களுக்காக என்னால் விநாயக பூஜையை அவசரப்படுத்த இயலாது. எனக்கு விநாயக பூஜையே கயிலாயம் " எனக் கூறிவிட்டார். அவர்களும் அப்படியே கிளம்பிவிட்டார்கள். பிறகு ஔவை மிக விரிவாக பூஜை செய்து முடித்தார்.முடிவில் விநாயாகர் பிரசந்நமாகி ஔவையைத் தனது துதிக்கையால் தூக்கி ஒரே வீச்சில் கயிலாயத்தில் கொண்டு சேர்த்துவிட்டார். அவருக்குப் பிறகுதான்சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கயிலையை அடைந்தார்கள்
"ஆதாரம் பயில் ஆருரர் தோழமை
சேர்த்தல் கொண்டவரோடே முன்னாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையில் ஏகி
ஆதி அந்த உலா பாடிய ஆசுகவி
சேரர்.......
என்ற பாடலில் சொல்லாமல் சொல்கிறார் அருணகிரிநாதர். அப்படிப்பட்ட கொங்கு தேசத்தில் உள்ள பெருமாளே என்று பாடுகிறார். சுந்தர மூர்த்தி சுவாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசம் சென்றதற்கு குமாரசுவாமியின் சம்பந்தத்தை இவ்வாறு உண்டாக்குகிறார். மூத்தபிள்ளையான விநாயகருக்கோ இதில் ஏற்கெனவே சம்பந்தம் உள்ளது.
அனைவருக்கும் முன்பே ஒரு வினாடியில் ஔவையை கயிலையில் சேர்த்துவிட்டார். மிகப் பெரிய அநுக்ரஹத்தை மிக அனாயாசமாகச் செய்கிற சுவாமி ஸ்ரீ விக்னேஸ்வரர். அப்படிப்பட்ட விக்நேஸ்வரரை, அவர் அருளாலே அவர் தாள் வணங்கி , அவருடைய அருளுக்குப் பாத்திரர்களாவோம்!!!!
"ஆதாரம் பயில் ஆருரர் தோழமை
சேர்த்தல் கொண்டவரோடே முன்னாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையில் ஏகி
ஆதி அந்த உலா பாடிய ஆசுகவி
சேரர்.......
என்ற பாடலில் சொல்லாமல் சொல்கிறார் அருணகிரிநாதர். அப்படிப்பட்ட கொங்கு தேசத்தில் உள்ள பெருமாளே என்று பாடுகிறார். சுந்தர மூர்த்தி சுவாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசம் சென்றதற்கு குமாரசுவாமியின் சம்பந்தத்தை இவ்வாறு உண்டாக்குகிறார். மூத்தபிள்ளையான விநாயகருக்கோ இதில் ஏற்கெனவே சம்பந்தம் உள்ளது.
அனைவருக்கும் முன்பே ஒரு வினாடியில் ஔவையை கயிலையில் சேர்த்துவிட்டார். மிகப் பெரிய அநுக்ரஹத்தை மிக அனாயாசமாகச் செய்கிற சுவாமி ஸ்ரீ விக்னேஸ்வரர். அப்படிப்பட்ட விக்நேஸ்வரரை, அவர் அருளாலே அவர் தாள் வணங்கி , அவருடைய அருளுக்குப் பாத்திரர்களாவோம்!!!!