ஸ்ரீ ஐயப்பன்

சிவனாகவும் விஷ்ணுவாகவும் உருவம் கொண்டிருப்பது ஒரே பரமாத்மாதான். சிவனாக இருக்கும் போது ஞான மூர்த்தியாகவும் நாராயணனாக இருக்கும் போது உலகைக் காக்கும் தொழிலைச் செய்பவராகவும் விளங்குகிறார். இப்படிச் செய்வதால் சிவனும் விஷ்ணுவும் வெவ்வேறு என்றோ , அல்லது தொழிலை ஒட்டிக் கொஞ்சம் வேறு பட்டது போல் காணப் படுகிற நிலையில் சிவனுக்குப் பரிபாலன சக்தி இல்லையென்றோ,அல்லது விஷ்ணுவுக்கு ஞான சக்தி இல்லையென்றோ அர்த்தமில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் முக்கியமாகச் செய்கிற அநுக்ரஹத்தை வைத்தே குறிப்பிடப் படுகிறது.

ஆலமரத்தினடியிலோ வெள்ளிப் பனி மலையின் மீதோ சிவபெருமான் விற்றிருக்கிறார். உடல் முழுதும் விபூதியைப் புசிக் கொண்டு, ஜடாமுடியும், புலித்தோலும் தரித்து ஞான ஸ்வருபியாக காட்சி தருகிறார். ஆத்மா த்யானத்தில் அமர்ந்திருக்கும் அவரது சந்நிதி ஒரே சாந்தமாக உள்ளது. பரம சத்தியத்தை போதிக்கும் பரம குரு அவரே. பரம ஞானத்தை உபதேசிப்பது ஞானியின் தொழில்.

லோக ரக்ஷணம் என்பது அரசனின் கடமை. அதனால்தான் ஸ்ரீமன் நாராயணனை ஸ்ரீ வைகுண்டத்தில் சக்கரவர்த்தியைப் போல் தியானிக்கிறோம்